- நெல்லி காங்
- காங்கிரஸ்
- நெல்லை
- ஜெயக்குமார் தனசிங்
- ஜனாதிபதி
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்
- கரைச்சுத்துப்புதூர்
- வெக்டியன்விளை, நெல்லை மாவட்டம்
- நெல்லை காங்கிரஸ்
நெல்லை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இது வரை 35 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிளை நிர்வாகிகள் இசக்கி மற்றும் அகிலா ஆகிய இருவரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் மதியம் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த வழக்கின் இறுதி கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் திடீர் திருப்பமாக சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் ஆறு பற்களை காணவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு பற்களை காணவில்லை என்பதால் அவரை யாராவது கடத்திச் சென்று கடுமையாக தாக்கி கொலை செய்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்லை காங். தலைவர் மரணத்தில் திடீர் திருப்பம்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை appeared first on Dinakaran.