×

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பான அறிக்கை தயாராக உள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஏற்கனவே, இதே போன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை தயாராக உள்ளது.

அந்த வழக்கு நாளை (இன்று) தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்றார். மனுதாரர் கே.பாலு, முதலில் விஷ சாராயம் குடித்தவர்கள் இறந்த நிலையில், மாவட்ட கலெக்டரின் தவறான அறிவிப்பால் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் காவல் துறை உயர் அதிகாரிகள் தொடர்பும் உள்ளது என்றார். இதையடுத்து, அதிமுக தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்குகள் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பான அறிக்கை தயாராக உள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Tamil Nadu government ,ICourt ,CHENNAI ,K. Balu ,Court ,CBI ,Chief Justice ,R. Mahadevan ,Justice ,Mohammad Sabiq ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி..!!