×

ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தலைவர் வி.பி.சிங்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவர் வி.பி.சிங் என்று அவரது பிறந்த நாள் வாழ்த்து செய்தியையொட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னாள் இந்திய பிரதமர், சமூக நீதி காவலர் வி.பி.சிங் 94வது பிறந்தநாளையொட்டி நேற்று சென்னை, மாநில கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்ட அவரது முழு திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவர் ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங். சமூகநீதி பயணத்தின் வெற்றியில் அவர் என்றும் வாழ்வார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

The post ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தலைவர் வி.பி.சிங்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : All India ,VP Singh ,CM ,Stalin ,CHENNAI ,Chief Minister ,M. K. Stalin ,India ,State College ,
× RELATED அகில இந்திய மகளிர் துப்பாக்கி சுடும்...