×

செலவை கட்டுப்படுத்தியதால் கடந்த நிதியாண்டில் ரூ.526 கோடியாக இழப்பீடு குறைப்பு: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2020-21ம் நிதியாண்டை காட்டிலும் இழப்பீடு கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ.526 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த 2022-23 ஆண்டை காட்டிலும் கடந்த நிதியாண்டில் மட்டும் 19.96 கோடி இழப்பீடு அதிகரித்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களுக்கான விடியல் பயணப் பேருந்துகள் 7,179 பேருந்துகளும், 2441 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளும் 8,632 புறநகர் பேருந்துகளும், 476 மலைப்பகுதி பேருந்துகளும் என 18,728 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் வரையறுக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 1,532 மாற்றுப் பேருந்துகளும் சேர்த்து 20,260 பேருந்துகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

இதில் கடந்த 2021-22ம் ஆண்டில் மகளிர் காண கட்டமில்லா பயண சேவை வழங்கப்பட்டதில் ரூ.1216.83 கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூ.2512.38 கோடியும், 2023-24 நிதியாண்டில் ரூ.2802.75 கோடியாகவும் பயண செலவினங்கள் அரசுக்கு அதிகரித்துள்ளன. இதில் பல்வேறு வழிகளில் போக்குவரத்துறை செலவுகளை குறைத்ததன் அடிப்படையில் கடந்த 2020-21ம் ஆண்டு அதிக பட்சமாக கணக்கிடப்பட்ட சராசரி மாத நட்டம் ரூ.694.04 கோடியிலிருந்து தற்போது 2023-24 நிதியாண்டில் இழப்பீடு ரூ.526.45 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த 2022-23ம் ஆண்டு காட்டிலும் ரூ.19.96 கோடி இழப்பீடு அதிகரித்துள்ளது.

14 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தியதன் காரணமாக சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இழப்பீடு அதிகரித்துள்ளது. இயக்க செலவுகளை பொருத்தமட்டில் ஊதியம் மற்றும் கூலி வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு 54.40 சதவீதமும், டீசலுக்கு 26.45 சதவீதமும், உதிரி பாகங்களுக்கு 1.96 சதவீதமும், மோட்டார் வாகன வரி 0.99 சதவீதம், கடங்களுக்கான வட்டி 12.45 சதவீதமும், இதர செலவுகளாக 3.75 சதவீதமும் என செலவினங்கள் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செலவை கட்டுப்படுத்தியதால் கடந்த நிதியாண்டில் ரூ.526 கோடியாக இழப்பீடு குறைப்பு: கொள்கை விளக்க குறிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,State Transport Corporation ,Dinakaran ,
× RELATED அரசு போக்குவரத்து கழகத்தில் போதைப்...