×

மின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மின் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது என்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மாசு இல்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இயங்கும் மின் வாகனங்களை பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, மோட்டார் வாகன வரியில் இருந்து 100 விழுக்காடு அரசு வரி விலக்கு அளித்து வருகிறது.

அந்த வகையில் 2020-21ம் ஆண்டில் 11936 வாகனங்களும், 2021-22ம் ஆண்டில் 39617 வாகனங்களும், 2022-23ம் ஆண்டில் 71831 வாகனங்களும், 2023-24ம் ஆண்டில் 1,00327 வாகனங்களும், 2024ம் ஆண்டு மே மாதம் வரை 15,715 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக கடந்த ஐந்து ஆண்டில் 2,39,426 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ஆண்டு தமிழ்நாட்டில் மின் வாகனங்களின் அதிகரித்து வருவது தெரிய வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

The post மின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shiva Shankar ,CHENNAI ,Tamil Nadu ,Transport Minister ,Sivashankar ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...