×

10ம் வகுப்பு தேர்வு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல், தேர்வுத்துறை இணைய தளமான www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள் நாளை பகல் 12க்கு பிறகு தங்கள் மதிப்பெண்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை கூறியள்ளது.

The post 10ம் வகுப்பு தேர்வு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...