×
Saravana Stores

வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கபட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) 265 பேருந்துகளும், 29ம் தேதி (சனிக்கிழமை) 320 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்.

பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28ம் தேதி 65 பேருந்துகளும், 29ம் தேதி 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும். வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 28ம் தேதியன்று 15 பேருந்துகளும், 29ம் தேதி 15 பேருந்துகளும் என ஆக மொத்தம் 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது . இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4,234 பயணிகளும் சனிக்கிழமை 1,930 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 4,179 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in < http://www.tnstc.in > மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government Rapid Transport Corporation ,Chennai ,Government of Tamil Nadu Rapid Transport Corporation ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 15ம் தேதி முதல் ஜன.16 வரை சபரிமலைக்கு...