×

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிட்டார்கள்: பாஜ, காங். மீது மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ: லக்னோவில், செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், ‘‘பாஜ மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் அரசியலமைப்பை காட்டுகின்றன. அவற்றின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர்கள் இருவரும் இந்த அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் செய்துள்ளனர். சாதிய,வகுப்பு வாத மற்றும் முதலாளித்துவ அரசியலமைப்பாக மாற்றியுள்ளனர். இது இனி பீம்ராவ் அம்பேத்கரின் சமத்துவ மற்றும் மதசார்பற்ற அரசியலமைப்பு அல்ல. அரசியல் ஆதாயங்களுக்காக இந்திய அரசியலமைப்புடன் இவர்கள் விளையாடும் விதம் ஏற்புடையது அல்ல” என்றார்.

The post அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிட்டார்கள்: பாஜ, காங். மீது மாயாவதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Mayawati ,Lucknow ,Bahujan ,Samaj ,Parliament ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...