×

முல்லைப் பெரியாறு உள்பட 9 புதிய அணைகள் கட்ட திட்டம்: கேரள சட்டசபையில் அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று அம்மாநில சட்டசபையில் கூறியது: முல்லைப் பெரியாறு உள்பட கேரளாவில் 9 புதிய அணைகளை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 129 வருடங்கள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தான் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணை கட்டினாலும் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும். தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பது தான் கேரள அரசின் கொள்கையாகும். புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post முல்லைப் பெரியாறு உள்பட 9 புதிய அணைகள் கட்ட திட்டம்: கேரள சட்டசபையில் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mullai Periyar ,Minister ,Kerala Assembly ,Thiruvananthapuram ,Kerala ,Roshi Augustine ,Mulla Periyar ,Mullai Periyar Dam ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...