×

ஜார்க்கண்டில் 33 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட தயாராகும் காங்.

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி முடிவடைகிறது. எனவே இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியானது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 31 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமத் மிர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதன் பின்னர் இரண்டு எம்எல்ஏக்கள் கட்சியில் இணைந்தனர். எனவே 33 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறோம் என்றார்.

The post ஜார்க்கண்டில் 33 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட தயாராகும் காங். appeared first on Dinakaran.

Tags : Congress ,Jharkhand ,Ranchi ,Mukti Morcha ,Dinakaran ,
× RELATED நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட்...