×

அரசின் நலத்திட்டங்களை அணுகுதல் குறித்து மகளிர்குழு தலைவிகளுக்கு பயிற்சி

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியத்தில் உள்ள மகளிர்குழு தலைவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி ஐஆர்சிடிஎஸ் நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியானது, தமிழக அரசு பழங்குடி நலத்துறை நிதி உதவியுடன் தொல்குடி வாழ்வாதார “ஐந்திணை” திட்டத்தின் கீழ் பழங்குடியினரின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்காக நடத்தப்பட்டது.இப்பயிற்சியில் மகளிர் சுய உதவிக்குழு மேலாண்மை, தலைமைத்துவ திறன்கள் மற்றும் பண்புகள், அரசு நலத்திட்டங்கள், வங்கிகளிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு வருவாய் பெருக்கு திட்டங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கருத்துகள் பேசப்பட்டன.

இப்பயிற்சியில் பங்காரம்பேட்டை, அரும்பாக்கம், பூண்டி, புதூர் காந்திகிராமம், பட்டரை பெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மகளிர்குழு தலைவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில், பழங்குடி நல இயக்குனரக மாநில திட்ட ஆலோசகர் பொன்வைத்தியநாதன், நபார்டு துணை நிறுவனமான நாபின்ஸ் மாவட்ட கிளை மேலாளர் பெ.குமார், ஐஆர்சிடிஎஸ் நிறுவன நிர்வாக செயலர் ஸ்டீபன், திட்ட மேலாளர் விஜயன், திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ தினேஷ் குமார், மகளிர் ஒருங்கிணைப்பாளர் வேளாங்கண்ணி மற்றும் களப்பணி ஒருங்கிணைப்பாளர் ஜெ.பழனி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.

The post அரசின் நலத்திட்டங்களை அணுகுதல் குறித்து மகளிர்குழு தலைவிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Poondi Union ,IRCTS ,Tamil Nadu Government Tribal Welfare Department ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...