×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர் அணி சார்பில் 2 நாள் கபடி போட்டி: எம்எல்ஏக்கள் பரிசு வழங்கி பாராட்டு


திருவள்ளூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிடர் அணி சார்பில் 2 நாள் கபடி போட்டி திருவேற்காடு நகராட்சி நூம்பல் பள்ளி விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. நகர செயலாளரும், நகரமன்றத் தலைவருமான என்.இ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் என்.ஜி.ஆசைத்தம்பி வரவேற்றார். மாவட்டத் தலைவர் வி.தணிகாசலம், மாவட்ட அமைப்பாளர் விமல், நிர்வாகிகள் சத்தியசீலன், என்.சி.அரசு, என்.பி.ஜெகன், இ.அன்பு, பி.பாலு, என்.சி.சங்கர், என்.சி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ1 லட்சம் ரொக்கம் வழங்கி பாராட்டினார். மாநில ஆதிதிராவிடர் அணி செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ 2ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் 3ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கினார். மேலும் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜே.பவுல் 4ம் இடம் பிடித்தவர்களுக்கும், ஆட்டநாயகன் விருதினையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் என்.ஜி.ஆசைத்தம்பி செய்திருந்தார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர் அணி சார்பில் 2 நாள் கபடி போட்டி: எம்எல்ஏக்கள் பரிசு வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : 2-day Kabaddi tournament ,Adi Dravidar ,Tiruvallur ,kabaddi ,Thiruvekadu Municipality Noompal School Sports Hall ,Thiruvallur Central District DMK ,City Secretary ,City Council President ,NEK Murthy ,Dinakaran ,
× RELATED மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணி