×

12ம் வகுப்பு மாணவி தற்கொலை


திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்விளாகம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவரது மகள் காவியா (16). இவர் திருவள்ளூரில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.  இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் காவியா வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அப்போது அவரது தந்தை முருகன் மற்றும் தாய் ஆகியோர் வீட்டின் அருகே உள்ள வயலில் பூப்பறிக்க சென்ரிருந்தனர்.

மனவேதனையில் இருந்த காவியா சமையலறைக்குச் சென்று அங்கு மின்விசிறியில் கயிறால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து முருகன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த காவியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 12ம் வகுப்பு மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Vinayakar Kovil Street ,Kavya ,Tiruvallur ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...