×

விபத்தில் புள்ளிமான் உயிரிழப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி அருகே புள்ளி மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிரிழந்தது. மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் துறைமுகம் அருகே நேற்று காலை ஒரு புள்ளிமான் சாலையை கடக்க முயன்றது. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த ஒரு வாகனம், புள்ளிமான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்ட புள்ளிமான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது.

இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து புள்ளிமான் உடலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

The post விபத்தில் புள்ளிமான் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kattupalli ,Meenjur ,Kamaraj Harbor ,Meenjoor ,Dinakaran ,
× RELATED ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில்...