×

ரூ12 லட்சம் வழிப்பறி வழக்கில் 5 வாலிபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை: கூடுதல் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு


பொன்னேரி: டாஸ்மாக் கடை மேலாளரிடம் ரூ12 லட்சம் பறித்த வழக்கில் 5 வாலிபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பொன்னேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொன்னேரி அடுத்த புதுவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் புதுவாயல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு மது விற்பனை பணம் ரூ12 லட்சத்தை எடுத்து கொண்டு கும்மிடிப்பூண்டி வழியாக ராகவரெட்டிமேடு அருகே பைக்கில் சென்றபோது காரில் வந்த கும்பல் பைக்கை இடித்துத் தள்ளி கத்தியைக் காட்டி பணத்தை பறித்துச் சென்றது.

இதில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சோழவரம் பெரிய காலனியைச் சேர்ந்த அருண் (23), மீஞ்சூர் அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயசீலன் (22), புழல் புனித அந்தோணியார் தெருவைச் சேர்ந்த பக்குதீன் (23), மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு அருண் (23), மதன்குமார் (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிபதி பிரேமாவதி நேற்றுமுன்தினம் மாலை குற்றவாளிகள் 5 பேருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post ரூ12 லட்சம் வழிப்பறி வழக்கில் 5 வாலிபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை: கூடுதல் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Ponneri court ,Tasmac ,Thiruchelvam ,Puduvayal ,Dinakaran ,
× RELATED ரூ12 லட்சம் வழிப்பறி வழக்கில் 5...