×

மனைவியின் தாய்மாமன் கத்தியால் குத்திக்கொலை: ரவுடி சரண்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனி (50), மீன்பாடி ரிக்ஷா ஓட்டி வந்தார். இவர், நேற்று மாலை வீட்டில் இருந்த போது அங்கு வந்த கொருக்குப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்த பெயின்டர் பிரசாந்த் என்கிற குள்ள பிரசாந்த் (30) வந்தார். ரவுடியான இவர் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பிரசாந்த் மனைவியின் தாய்மாமன் பழனி, குடும்ப பிரச்னை காரணமாக சண்டை போட்டுள்ளார். அப்போது, குள்ள பிரசாந்த் வீட்டிற்கு சென்று காய்கறி நறுக்கும் கத்தியை கொண்டு வந்து பழனியின் வலது கழுத்து, வலது கண் புருவம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் ஏற்பட்டு பழனி கத்தியுள்ளார். அக்கம் பக்கத்தில் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குள்ள பிரசாந்த், வழக்கறிஞருடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

The post மனைவியின் தாய்மாமன் கத்தியால் குத்திக்கொலை: ரவுடி சரண் appeared first on Dinakaran.

Tags : Rowdy Charan ,Thandaiyarpet ,Palani ,Korukuppet ,Bharati Nagar Slum Replacement Board ,Korukuppet Kamaraj ,Rowdy Saran ,
× RELATED பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய்...