×

திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில் தெருதெருவாக பெட்ரோல் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் தெரு தெருவாக சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு நேரங்களில் வீடுகள் முன்பு சாலையோரம் நிறுத்தப்படும் பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாக அப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு 2 மர்ம நபர்கள் சர்வ சாதாரணமாக வந்து பெட்ரோலை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில், பைக்கில் வரும் 2 மர்ம நபர்கள் திருவல்லிக்கேணி பகுதிகளில் ஒவ்வொரு தெருவாக சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகளில் இருந்து பெட்ரோலை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவுகளை வைத்து திருவல்லிக்கேணி போலீசார் தொடர் பெட்ரோல் திருடி வரும் 2 மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில் தெருதெருவாக பெட்ரோல் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni ,CHENNAI ,
× RELATED திருவல்லிக்கேணியில் தொடரும்...