×

முடி ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.21.50 லட்சம் கையாடல்: பெண் கணக்காளரிடம் விசாரணை

சென்னை: முடி ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.21.50 லட்சம் கையாடல் செய்ததாக பெண் கணக்காளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அழிஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (39). இவர் தி.நகர் மெலோடி தெருவில் ராஜ் ஹேர் இன்டர்நேஷனல் என்ற பெயரில் முடி ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது நிறுவனத்தில் ஆண்டு கணக்குகளை சரிபார்த்த போது, அதில் ரூ.21.50 லட்சம் நிறுவன கணக்காளராக பணியாற்றி வரும் மலர் (34) கையாடல் செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று மாம்பலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்திய போது, கணக்காளராக பணியாற்றி வரும் மலர், முடி ஏற்றுமதி நிறுவனத்திற்கு வரும் காசோலைகள் மற்றும் பணத்தை சிறுக சிறுக தனது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மோசடி தொடர்பாக நிறுவனத்தின் கணக்காளர் மலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முடி ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.21.50 லட்சம் கையாடல்: பெண் கணக்காளரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Radhakrishnan ,Achinchivakkam ,Ponneri ,Raj Hair International ,Melody Street, D. Nagar ,
× RELATED கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற...