×

வேறு ஒருவருடன் திருமணம் காதலியின் வீடு, பைக் சூறை: காதலன் உள்பட 8 பேர் கைது

தண்டையார்பேட்டை: காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் சுனில் (எ) சுண்டு (23). மீன்பிடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த (23) இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் சுனிலின் நடவடிக்கை சரியில்லாததாலும், இவர் மீது 2 அடிதடி வழக்குகள் இருந்ததாலும் திருமணம் செய்து தர மறுத்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் வேறொரு வாலிபருக்கு மகளை திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுனில் பழிவாங்குவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் வீட்டுக்கு சென்று ஜன்னல் கண்ணாடிகளை கல்லால் அடித்து நொறுக்கினர். மேலும், வெளியே இருந்த ஸ்கூட்டரையும் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து கும்பல் தப்பித்து சென்றுவிட்டது. இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து சுனில் மற்றும் நண்பர்கள் விக்னேஷ் (எ) பேய் (23), சர்மா (18), குப்புசாமி (21), சஞ்சய் (25), சுபாஷ் (23), லிவிங்ஸ்டன் (24) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 8 பேரை கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனை கெல்லீஸ் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்றவர்களை புழல் சிறையிலும் அடைத்தனர்.

The post வேறு ஒருவருடன் திருமணம் காதலியின் வீடு, பைக் சூறை: காதலன் உள்பட 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Sunil (A) Sundu ,Kasimedu Pallavan ,
× RELATED ஓடும் காரில் திடீர் தீவிபத்து