×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் பவானி தலைமை தாங்கினார். இதில், சுகாதார செவிலியர்கள், துணை சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நியமன செய்வதை தவிர்த்து விடவேண்டும் உள்ளிட்டவைகளை எளிமைப்படுத்தும் வரை ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு கணினி செயல்பாட்டாளரை நியமனம் செய்ய வேண்டும், கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை தவிர இதர பணிகளில் ஈடுபடுத்த கூடாது. செவிலியர்களை கணினி பதிவு செய்யும் பணிக்கு உட்படுத்துவதை கைவிட வேண்டும். ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல பெண் சுகாதார செவிலியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பாலின பாகுபாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பெருந்திரள் முறையீடு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாவதி, மாவட்ட செயலாளர் மங்கலம், மாவட்ட துணை பொருளாளர்கள் மைதிலி மற்றும் அமலா, செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Tamil Nadu Government All Health Nurses Association ,Kavalan Gate ,Kanchipuram District Collectorate ,
× RELATED அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்