- சமாஜ்வாடி
- சந்திரசேகரன்
- உணவு கடத்தல் தடுப்பு பிரிவு
- டிஎஸ்பி
- நந்தகுமார்
- எஸ்ஐ ரேகா
- கட்பாடி ரயில்வே
- பெங்களூரு
- கத்பாடி
- தின மலர்
வேலூர்: உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி சந்திரசேகரன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி நந்தகுமார், எஸ்ஐ ரேகா மற்றும் போலீசார் காட்பாடி ரயில் நிலையம் வழியாக கடந்து சென்ற அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் சோதனையிட்டனர். அதில் பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கையின்கீழ் வைக்கப்பட்டிருந்த 1.50 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றினர். இதுதொடர்பாக பாணாவரத்தை சேர்ந்த கோ(எ)கோவர்த்தன்(25) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் தொடர்ந்து பாணாவரம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி பங்காருப்பேட்டைக்கு ரயிலில் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது. அதேபோல் அதே பெட்டியில் கேட்பாரற்று கிடந்த அரை டன் ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டது. இதுதவிர உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு தனிப்படை போலீசார் எஸ்ஐ முக்தீஸ்வரன் தலைமையில் நடத்திய வேட்டையில் ரயில் நிலையத்தில் காட்பாடியில் கேட்பாரற்று கிடந்த சுமார் 300 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி வேலூர் சிவில் சப்ளை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
The post காட்பாடியில் 2.3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.