×

தென்காசி மாவட்டம் இராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டம், இராமநதி நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தினை கருத்தில் கொண்டு, இராமநதி பாசனம் – வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றின் நேரடி பாசனம் 1008.19 ஏக்கர் நிலங்களுக்கு 1433-ம் பசலி கார் பருவ சாகுபடி செய்வதற்கு 26.06.2024 முதல் 31.10.2024 வரை 128 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் உள்ள இராமநதி பாசனம்-வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றின் நேரடி பாசனம் 1008.19 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்காசி மாவட்டம் இராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tenkasi District ,Ram Nadi Reservoir ,Tenkasi ,Ramanadi Reservoir ,Ramnadi ,North ,South ,Papankal ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...