×

காமராஜர் இல்லம் உள்ளிட்ட 6 பாரம்பரியக் கட்டடங்கள் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும் : நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியீடு

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை பின்வருமாறு..

*முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், 200 கி.மீ. நீளச் சாலைகளை நான்கு வழித்தடமாகவும், 550 கி.மீ. நீளச் சாலைகளை இரு வழித்தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

*ரூ. 28 கோடியில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் அமைக்கப்படும்.

*ரூ.680 கோடியில் ஊராட்சி/ஊராட்சி ஒன்றியச் சாலைகளில், 600 கி.மீ. சாலைகள் இதர மாவட்டச் சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும். கடந்த மூன்று ஆண்டுகளில் 2787 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி/ஊராட்சி ஒன்றிய சாலைகளைத் தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

*ரூ.36 கோடியில் சென்னை பெருநகர மாநகரப் பகுதியில் பணிகள் : வேளச்சேரி இரயில் நிலைய பேருந்து நிறுத்தம்; சென்னை உள்வட்டச் சாலையில் கோயம்பேடு சந்திப்பு அருகே, 2 இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைத்தல்; பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் காமாட்சி மருத்துவமனை முதல் துரைப்பாக்கம் வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல்.

*ரூ.300 கோடியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த, சாலைச் சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்

*ரூ.200 கோடியில் தொழிற்சாலைப் பகுதிகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்தும்/வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்

*ரூ.200 கோடியில் “அனைத்து கால நிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்துத் திட்டம்”முதலமைச்சரின் முத்தாய்ப்பான திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள 50 தரைப் பாலங்கள் உயர் மட்டப் பாலங்களாகக் கட்டப்படும்.

*ரூ.43.34 கோடியில் 6 பாரம்பரியக் கட்டடங்கள் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்.

*சென்னை தி. நகரில் உள்ள காமராஜர் இல்லம்: ரூ.2.60 கோடி. சென்னை, பூந்தமல்லி, விக்டரி நினைவு பார்வையற்றோர் பள்ளிக் கட்டடம்: ரூ.24.20 கோடி.

*சென்னை, நுங்கம்பாக்கம், பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கியச் சங்கக் கட்டடம்: ரூ.6.19 கோடி. திருச்சி டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடம்: ரூ.4.85 கோடி.

*கன்னியாகுமரி, இடலாக்குடியில், சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் : ரூ.3 கோடி. ராணிப்பேட்டை, பாலாறு நதிக்கரையிலுள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் நினைவுச் சின்னங்கள்: ரூ.2.50 கோடி

*ரூ.321 கோடியில் தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களுக்குப் புறவழிச் சாலையும் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை புதிய இணைப்புச் சாலையும் அமைக்கப்படும்.

The post காமராஜர் இல்லம் உள்ளிட்ட 6 பாரம்பரியக் கட்டடங்கள் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும் : நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Kamarajar House ,Highway Department ,Chennai ,Tamil Nadu ,Kamarajar ,House ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி சாலையில் நெரிசலை தவிர்க்க...