×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்ந்து புதிய சாதனை

 

மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று மிகுந்த ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே அதிகரித்த சென்செக்ஸ் இறுதிநேரத்தில் 823 புள்ளிகள் உயர்ந்து 78,164-ஐ தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 712 புள்ளிகள் உயர்வுடன் 78,054 புள்ளிகளில் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. ஆக்சிஸ் வங்கி பங்கு 3.4%, ஐசிஐசிஐ வங்கி 2.4%, எச்டிஎஃப்சி வங்கி பங்கு 2.3% விலை உயர்ந்து வர்த்தகமாயின. டெக் மகிந்திரா பங்கு 1.8%, எல் அன்ட் டி பங்கு 1.5%, பஜாஜ் பின்செர்வ், எஸ்.பி.ஐ. பங்குகள் 1% விலை உயர்ந்தன.

ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., கோட்டக் மகிந்திரா, அல்ட்ரா டெக் சிமென்ட் பங்குகளும் விலை அதிகரித்தன. பவர்கிரிட், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்லே, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 197.65 புள்ளிகள் அதிகரித்து 23,735 புள்ளிகளை தொட்டு சாதனை. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 183 புள்ளிகள் உயர்வுடன் 23,721 புள்ளிகளில் நிறைவடைந்தது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்ந்து புதிய சாதனை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிவு..!!