×

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுனருக்கு கண் பரிசோதனை முகாம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற
கண் பரிசோதனை முகாமினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்காக இன்று (25.06.2024) இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சிப் பணிமனையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து வட்டார அலுவலகங்கள், துறைகள் மற்றும் மண்டலங்களில் பணிபுரியும் 744 நிரந்தர ஓட்டுநர்களுக்காக இந்த பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இந்த கண் பரிசோதனை முகாமானது முதற்கட்டமாக இன்று (25.06.2024) மற்றும் நாளை (26.06.2024) இராயபுரம் மண்டலத்தில் உள்ள மாநகராட்சிப் பணிமனையில் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக, 02.07.2024, 03.07.2024, 09.07.2024, 10.07.2024 மற்றும் 19.07.2024 ஆகிய நாட்களில் புதுப்பேட்டை பணிமனையின் பின்புறம் அமைந்துள்ள சமுதாய நலக்கூடக் கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., சங்கர நேத்ராலயா தலைவர் டி.எஸ்.சுரேந்திரன், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் பா. வேளாங்கண்ணி, தலைமைப் பொறியாளர் எஸ்.சக்தி மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுனருக்கு கண் பரிசோதனை முகாம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்! appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Mayor Priya ,Chennai ,Mayor ,Priya ,Metropolitan Chennai Corporation ,Sankara Nethralaya Eye Hospital ,Dinakaran ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...