×

வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ்

தேவையான பொருட்கள்

3 வாழைப்பழம்
1/2 கப் ஓட்ஸ்
ஒரு சிட்டிகை உப்பு
1/2 கப் உலர்ந்த திராட்சை
1/4 டீஸ்பூன் பட்டை பொடி
2 டேபிள்ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்.

செய்முறை

நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும். அத்துடன் ஓட்ஸ் பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் ஒரு சிட்டிகை உப்பு, உலந்த திராட்சை சேர்த்து ஸ்பேட்டுலா வைத்து நன்கு கலந்து விட்டால் குக்கீஸ் கலவை தயார். குக்கீஸ் பேக் செய்ய பேக் ட்ரே எடுத்து அதில் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும். பின்னர் கலந்து வைத்துள்ள குக்கீஸ் கலவையை ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப்பில் எடுத்து பேக்கிங் ஷீட்டில் வைக்கவும். அதன் மேல் கரண்டி வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து, சாக்கோ சிப்ஸ் வைத்து அழுத்தவும். பின்னர் மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வைத்து பத்து நிமிடங்கள் ஹீட் செய்து பதினைந்து நிமிடங்கள் பேக் செய்யவும். அப்படியே கொஞ்சம் விட்டு ஆறியவுடன் எடுத்தால் சுவையான கிரிஸ்பியான பனானா ஒட்ஸ் குக்கீஸ் தயார்.

The post வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?