சென்னை : பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் விருது வழங்கி கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்கத்தின் இயக்குனரும் மருத்துவருமான பிரேம் சேகர் மற்றும் விருது குழுவின் இயக்குனர் சந்துரு நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை, கல்வித்துறை, ரேகா செட்டி நினைவு கூறும் வகையில் விருதுகள், மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோட்டரி சங்கத்தின் இயக்குனரும் மருத்துவருமான பிரேம் சேகர் பேசியதாவது; இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்; தமிழ்நாடு முழுவதும் விரைவில் தமிழக அரசுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வுகள் நடத்தப்படும். மேலும், சாலை பாதுகாப்பு, கண் தானம், உடல் உறுப்பு தானம், பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு ல், உள்ளிட்டவை மையப்படுத்தி அதற்கும் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். இதேபோல ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் ஆளுமைகளுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும் என குறிப்பிட்டார்.
The post தமிழக அரசுடன் இணைந்து போதை பொருள் தடுப்பு தொடர்பாக மாவட்ட அளவில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்: ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.