×

கள்ளக்குறிச்சி விவகாரம்: மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 95 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம்.! 70 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் 95 பேரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்து 222 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி, கண்பார்வை குறைபாடு ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தீவிர சிகிச்சை பலனின்றி 59 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிறப்பு மருத்து குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபர்கள் குறித்து மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) டாக்டர் நேருவிடம் கேட்டபோது, தற்போது வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அவசர வார்டு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழுவினரை கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

3வது தளத்தில் உள்ள உள்நோயாளிகள் பிரிவு 3 வார்டுகள் மற்றும் முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு வார்டு பகுதியில் உள்ள 2 வார்டு பிரிவுகளில் என மொத்தம் 95 பேர் சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்து நார்மலான சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சையில் குணமடைந்து தயார் நிலையில் உள்ள சுமார் 70 பேர் இன்று (25ம் தேதி) அல்லது நாளை டிஸ்சார்ஸ் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post கள்ளக்குறிச்சி விவகாரம்: மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 95 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம்.! 70 பேர் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : CALLACURICHI ,Kalalakurichi ,Karunapuram, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...