×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவையொட்டி ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 64 பேர் வேட்பு மனு அளித்தனர்.

மனுக்கள் மீதான பரிசீலனையில், திமுக அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா ஆகியோர் உள்பட 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு நாளை (26ம் தேதி) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,DMK ,MLA Pugahendi ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக,...