×

லஞ்சம் வாங்கி கைதான செயற்பொறியாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தில் கான்ட்ராக்டரிடம் லஞ்சம் வாங்கி கைதான, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் உள்பட 2 பேரை, கலெக்டர் பிருந்தாதேவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். கான்ட்ராக்டரான இவர், தலைவாசல் பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதற்கு ₹90 லட்சம் கொடுக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். இதற்காக ₹50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் இளநிலை வரைபட அலுவலர் சாகுல் அமீது ஆகியோர் கேட்டுள்ளனர்.

இதனை செந்தில் வழங்கிய நிலையில், மேலும் ₹61 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இதையடுத்து அவர்கள் கூறியபடி கடந்த 20ம் தேதி, செந்தில் ₹61 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற்பொறியாளர் மற்றும் வரைபட அலுவலரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் சாகுல் அமீது ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.

The post லஞ்சம் வாங்கி கைதான செயற்பொறியாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Salem ,Brindadevi ,Senthil ,Varakur ,Thalivasal ,Talivasal ,Dinakaran ,
× RELATED தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு