×

பாலியல் வழக்கு: பிரஜ்வலுக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

டெல்லி: பிரஜ்வல் மீது 4வது பாலியல் வழக்கு பதிவான நிலையில் அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கிறது. பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார். பிரஜ்வல் தன்னை பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து பலருக்கு பகிர்ந்து, தொடர்ந்து மிரட்டியதாக பெண் புகார் அளித்தார். பிரஜ்வல் மட்டுமின்றி ஹாசன் பாஜக முன்னாள் எம்எல்ஏ ப்ரீத்தம் கவுடா உள்ளிட்ட மேலும் 2 பேர் வீடியோவை வைத்து மிரட்டினர். பிரஜ்வலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்த நிலையில் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post பாலியல் வழக்கு: பிரஜ்வலுக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : PRAJWAL ,Delhi ,CID ,Bangalore ,
× RELATED ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை...