×

ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்பதை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன்: நீதிபதி ஜெயச்சந்திரன்

சென்னை: ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்பதை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன் என நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தை விற்று பணத்தை திரும்பத் தருவதுதான் தார்மீக பொறுபாகும் இதையெல்லாம் மறைத்து மனுக்களை திரும்ப பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரூ.35 கோடிக்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அன்மையில் யூடியூப்பர் சங்கர் தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அதிரடியான கருத்துகளை தெரிவித்ததோடு அதனை தீர்ப்புகளில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், இன்றைக்கு தமிழ்நாடு நிதிநிறுவன மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் ரூ.35 கோடி அளவில் முதலீட்டாளர்களை ஏமாற்றியது தொடர்பான வழக்கை ரத்து செய்யகோரிய வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி நிறுவனத்தை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவதுதான் தார்மீகபொறுப்பாகும். இதனை எல்லம் மறைத்து மனுக்கள் திரும்ப பெற அனுமதி வழங்கிருப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் சில வழக்கறிங்கள் குற்றவாளிகளை பாதுகாக்க நீதிமன்றத்திற்கு வரும்போது சில நீதிபதிகள் அவர்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் நிதிபதியின் சமுகத்தை சார்ந்தவர்களாக இல்லாவிட்டால், அந்த நீதிபதியின் சமுகத்தை சார்ந்த வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக ஆஜராக நியமிக்கிறனர் என வேதனையை வெளிபடுத்தியுள்ளார். சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் தற்போதுள்ள நீதிபதிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதையும் சுட்டிகாட்டிய அவர் சம்பந்தபட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு எதிராக போரை தொடங்கியுள்ளேன் என கூறியுள்ளார்.

ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்பதை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன் என நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.

The post ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்பதை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன்: நீதிபதி ஜெயச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Justice ,Jayachandran ,Chennai ,Judge ,Justice Jayachandran ,
× RELATED ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில்...