×

செல்போன் பேசியபடி பைக் ஓட்டிய வாலிபரால் விபத்து புளிய மரத்தில் அரசு பஸ் மோதி குழந்தை உட்பட 19 பேர் படுகாயம்

*ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே செல்போன் பேசியபடி பைக் ஓட்டிய வாலிபர் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது புளியமரத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஊராட்சி, கட்டேரி அம்மன் கோயில் அருகே திருப்பத்தூரில் இருந்து நாட்றம்பள்ளி வழியாக பர்கூர் செல்லும் அரசு பஸ்சை ஓட்டுனரான வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த ஜீவா(47) என்பவர் நேற்று ஓட்டிச் சென்றார்.

அப்போது கட்டேரி அம்மன் கோயில் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் அரசு பேருந்து வருவதை அறியாமல் செல்போன் பேசியபடி பைக்கில் வந்துள்ளார். அப்போது, ஓட்டுநர் பைக் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பி உள்ளார். இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்கம் சுக்குநூறாக ெநாறுங்கி பயணம் செய்த கல்லூரி மாணவி, இரண்டு வயது குழந்தை உட்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர ஜீவா(47), திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மனைவி முருகம்மாள்(50), பூசாரி ஊர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி சிவகாமி (55), கோணப்பட்டு பகுதியை சேர்ந்த கனகராஜ் மனைவி பூங்கோதை(63), நல்ல குண்டா பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி அஸ்வினி(24), இவரது மகள் திவிஷா(2), ஜங்களாபுரம் கிருஷ்ணன் மனைவி கற்பகம்(58), திரியாலம் திருப்பதி மனைவி செண்பகவள்ளி(49),

கல்லூரி மாணவி மனோகரன் மகள் திவ்யா(19), திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி பச்சராணி(43), நாட்றம்பள்ளி பகுதி சேர்ந்த சின்னத்தம்பி மனைவி நிலா(63), வெள்ளநாயக்கனேரி பகுதியை சேர்ந்த பழனி மனைவி ஆனந்தி(43), குணசேகரன் மனைவி சுமதி(47), பச்சூர் அடுத்த சாம கவுண்டனூர் பகுதியை சேர்ந்த கண்டக்டர் செல்வராஜ்(54), நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகள் ஜெயஸ்ரீ(19), அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த வேலு மகன் பரத் (17), சென்னையை சேர்ந்த முத்து மகன் கோகுல்(17), பழனி மகன் தரணி(17), நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி பரிமளா ஆகிய 19 பேரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post செல்போன் பேசியபடி பைக் ஓட்டிய வாலிபரால் விபத்து புளிய மரத்தில் அரசு பஸ் மோதி குழந்தை உட்பட 19 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Jolarpet Jolarpet ,Jolarpet ,Tirupathur district ,
× RELATED பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை...