×

ஆம்பூர் அருகே காரப்பட்டில் 2 ஆண்டிற்கும் மேலாக கேட்பாரற்று கிடக்கும் மின் கம்பிகள்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆம்பூர் : ஆம்பூர் அருகே காரப்பட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மின்கம்பிகள் கேட்பாரற்று கிடக்கின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் அருகே காரப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே மின்வாரிய பணிகளுக்காக இரண்டு ராட்சத ரோல் கொண்ட மின்கம்பிகள், மற்றும் இதர கம்பிகள், மின் ஒயர் பொருத்த இரும்பு தளவாடங்கள் ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது.

கொல்லகொட்டாய் அருகே இந்த பணிகள் துவங்க இருந்த நிலையில் அங்குள்ள தனியார் நிலத்தில் இந்த மின்வாரிய பொருட்களை மின் ஊழியர்கள் லாரியில் கொண்டு வந்து இறக்கி சென்றனர். ஆனால் இதுவரை பணிகள் நடக்காத நிலையில் அந்த மின்கம்பிகள் கேட்பாரற்று செடிகளுக்கு நடுவில் கிடப்பதாகவும், அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவோ அல்லது அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆம்பூர் அருகே காரப்பட்டில் 2 ஆண்டிற்கும் மேலாக கேட்பாரற்று கிடக்கும் மின் கம்பிகள் appeared first on Dinakaran.

Tags : Karaphat ,Ampur ,KARAPAT ,Dinakaran ,
× RELATED ஆம்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்...