×

பொன்னமராவதி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் விடுபடக்கூடாது

*குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கே வீடு

*ஆணையர் அறிவுறுத்தல்

பொன்னமராவதி : குடிசை இல்லா தமிழகம் உருவாக்க தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள கலைஞரின் கனவு இல்லம் பொன்னமராவதி ஒன்றியத்தில் விடுபடாமல் சேர்க்க வேண்டும். இதில் முழுக்க முழுக்க குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கே வீடு என ஆணையர் தெரிவித்துள்ளார்.பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு திட்டம் குறித்த ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமச்சந்திரன் தலைமைவகித்தார். இதில் கலந்து கொண்டு கிராம ஊராட்சி ஆணையர் ஆயிசாராணி கூறியதாவது:

தமிழக முதல்வர் தமிழகத்தில் குடிசை வீடுகள் இல்லாத தமிழகம் உருவாக கலைஞரின் கனவு இல்லாம் வீடு கட்டும் திட்டத்தினை அறிவித்துள்ளார். இது வருகின்ற ஜூலை முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக குடிசை வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்கள் குடிசை வீட்டில் வசதித்து வந்தால் அவர்களை ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யலாம். அரசு இடத்தில் குடிசை வீட்டில் குடியிருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டு முழுக்க முழுக்க குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கே இந்த கலைஞரின்கனவு இல்லத்தில் வீடு வழங்கப்படும் வருங்காலங்களில் சீட்டுவீடு, ஒட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு அரசு வீடு வழங்கும். ஏற்கனவே பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் பெயர் உள்ளவர்களுக்கு விரைவில் வீடு கட்ட அரசு ஆணை வழங்கும்.

இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லத்திற்கு வீடு கட்ட தகுதியாக பயனாளிகளை தேர்வு செய்ய ஊராட்சி தலைவர்கள் முன்னுறுமை வழங்கவேண்டும் என்றார். வீடுகள் இல்லாதவர்களுக்கும், சீட்டுவீட்டில் வசிப்போருக்கும் ஓட்டு வீட்டில் வசிப்போருக்கும் வீடு கட்ட வழிவகை செய்யவேண்டும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டம் முன்பு போல அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும்.

15வது நிதிக்குழு மானிய திட்ட நிதியில் ஊராட்சிகளுக்கு தேவையாக பணிகளை எடுத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். 100நாள் வேலை திட்டத்திற்கு இனி பணியாளர்கள் செய்யும் வேலையினை அளந்து அதற்கேற்பவே ஊதியம் வழங்கப்படும். நல்ல வேலை செய்யும் பணியாளர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கவேண்டும். வரும் 27ம்தேதி (வியாழக்கிழமை) முதல் அனைத்து ஊராட்சிகளிலும் 100நாள் வேலை திட்டம் தொடங்கப்படும். 15வது நிதிக்குழு மானியத்திட்டத்தில் அரசு சொல்லும் பணிகளையே எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் பொறியாளர் செந்தில், துணை ஆணையர் நிர்வாகம் கண்ணன், மண்டல துணை ஆணையர்கள் சிங்காரவேலு, பூமிநாதன், ஊராட்சித் தலைவர் முருகேசன், கிரிதரன், கீதா, காமராஜ், ராமையா, திவ்யா, அழகுமுத்து, பழனிவேல், ரேவதி, அழகு, லெட்சுமி உட்படபலர் கலந்து கொண்டனர்.

*வீடுகள் இல்லாதவர்களுக்கும், சீட்டுவீட்டில் வசிப்போருக்கும் ஓட்டு வீட்டில் வசிப்போருக்கும் வீடு கட்ட வழிவகை செய்யவேண்டும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டம் முன்பு போல அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும்.

The post பொன்னமராவதி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் விடுபடக்கூடாது appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati Union ,Ponnamaravati ,Tamil ,Nadu ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED பொன்னமராவதி அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு