×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2வது நாளாக ஜமாபந்தி கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்

*கலெக்டர் உத்தரவு

ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2வது நாளாக ேநற்று நடந்த ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து அறிக்கை வழங்க வேண்டும் என்று தாசில்தாருக்கு கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் 1433ம் பசலிஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தி கடந்த 21ம் தேதி ராணிப்பேட்டை கலெக்டர் ச.வளர்மதி தலைமையில் தொடங்கியது. இந்த ஜமாபந்தியில் வருவாய்த்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் 24 வகையான கணக்கு பதிவேடுகள் சரி பார்க்கப்படுகிறது. மேலும் கிராமத்தில் பயிர் அடங்கல், நிலவரி வசூல், பயிர் தீர்வை, நிலத்தீர்வை, கிராம கணக்குகள், பயிர் சாகுபடி கணக்கு, பட்டா பெயர் மாற்றம், அரசு புறம்போக்கு நிலம் பராமரிப்பு பதிவேடு, ஆக்கிரமிப்பு இடம் பராமரிப்பு பதிவேடு, நிலங்கள் குறித்த பதிவேடு போன்ற பல்வேறு வகையான பதிவேடுகள் சரி பார்க்கப்படுகிறது.

2வது நாளான நேற்று திமிரி உள்வட்டத்தை சேர்ந்த மேலத்தாங்கல், பரதராமி, பாளையம், மோசூர், வணக்கம்பாடி, தாமரைப்பாக்கம், திமிரி, மருத்துவம்பாடி, விளாரி, விளாப்பாக்கம் ஆகிய 10 கிராமங்களின் தீர்வை கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பொது பிரச்சனை உள்ளிட்ட 112 கோரிக்கை மனுக்களை ராணிப்பேட்டை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கி தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதன் மீது உடனடியாக விசாரணை செய்து அறிக்கை வழங்கிட தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் அருள் செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரூபி, வட்ட வழங்கல் அலுவலர்சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.3வது நாளான இன்று ஆற்காடு மற்றும் ஆற்காடு உள்வட்டத்தை சேர்ந்த சாத்தூர், தாஜ்புரா, முப்பதுவெட்டி, பூங்கோடு, மாங்காடு, சர்வந்தாங்கல், குஞ்சரப்பந்தாங்கல், லாடவரம், புன்னப்பாடி, அத்தித்தாங்கல் ஆகிய 11 ஊர்களுக்கான கிராம கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து கலெக்டர் ச.வளர்மதி மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.

கலவை: கலவை தாலுகா அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி கலால் உதவி ஆணையாளர் வரதராஜன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. 2ம் நாளாக நேற்று நடந்த ஜமாபந்தியில் மழையூர், வெள்ளம்பி, பென்னகர், நல்லூர், வேம்பி, குட்டியும், வாழைப்பந்தல், ஆரூர் உட்பட மாம்பாக்கம் உள்வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜமாபந்தி அலுவலர் கலால் உதவி ஆணையாளர் வரதராஜனிடம் வழங்கினர். இதில், தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் ஷம்ஷாத், வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், நிரோஷா, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், விக்னேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெமிலி: நெமிலி தாலுகா அலுவலகத்தில் 2ம் நாளாக நேற்று ஜமாபந்தி நடந்தது. ஜமாபந்தி அலுவலர் டிஆர்ஓ சுரேஷ் தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெயபிரகாஷ், துணை தாசில்தார்கள் சமரபுரி, பன்னீர்செல்வம், சுரேஷ், விஏஓ பூபாலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், காவேரிப்பாக்கம் உள்வட்டம் சிறுகரும்பூர், கொண்டாபுரம், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், கரிவேடு, களத்தூர், சங்கரன்பாடி ஆகிய கிராமங்கள், நெமிலி உள்வட்டம் கீழ்வீதி, மேலேரி, காட்டுப்பாக்கம், மேல்களத்தூர், எலத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்படி, நேற்று நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 117 மனுக்கள் ெபறப்பட்டது.

இந்நிலையில், நெமிலி தாலுகா, காட்டுப்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என 15க்கும் மேற்பட்ேடார் டிஆர்ஓ சுரேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அரக்கோணம்: அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 2வது நாள் கணக்குகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. ஆர்டிஓவும், ஜமாபந்தி அலுவலருமான பாத்திமா 100க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தாலுகா அலுவலகத்திற்கு வந்து ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், அரக்கோணம் தாலுகா மேல்பாக்கம், இச்சிப்புத்தூர், கைனூர், மூதூர், கீழாந்தூர், சோமசுந்தர நகர், சக்தியவாணி முத்து நகர், பெருமூச்சி ஏபிஎம் சர்ச், புதுப்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓஏபி, ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அப்போது, நேர்முக உதவியாளர் விஜயக்குமார், தாசில்தார் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

சோளிங்கர்: சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ மனோன்மணி தலைமையில் 2ம் நாள் ஜமாபந்தி நேற்று நடந்தது. சோளிங்கர் உள்வட்டம் சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், வெங்குபட்டு, பரவத்தூர், சோளிங்கர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, சோளிங்கரை சேர்ந்த சமூக ஆர்வலர் அளித்த மனுவில், சோளிங்கர் நகராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாக கட்டிடம் கட்டி வருகிறார். எனவே ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றி அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். நேற்று நடந்த ஜமாபந்தியில் 151 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில், தாசில்தார் ரேவதி, ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் ரவி, ஆர்ஐ தமிழரசி, விஏஓ சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2வது நாளாக ஜமாபந்தி கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ranipet district ,Jamabandi ,Varamathi ,Ranipet district, Arkadu ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...