- திண்டுக்கல் கலெக்டர்
- திண்டுக்கல்
- திண்டுக்கல் மாவட்டம்
- நீலக்கோட்டை தாலுக்
- குள்ளலக்குண்டு கிராமம்
- தின மலர்
*திண்டுக்கல் கலெக்டரிடம் வயதான பெற்றோர் மனு
திண்டுக்கல் : முறையாக கவனிக்காத மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யவேண்டும் என்று, வயதான பெற்றோர் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, குல்லலக்குண்டு கிராமத்தை சேர்ந்த மகாமுனி (77), அவரது மனைவி சிட்டுவள்ளி (65) ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை சமாதானம் செய்த போலீசார், கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தப் பின் மகாமுனி கூறுகையில், ‘‘என்னுடைய சொத்துக்களை எனது மகனுக்கு தானமாக வழங்கினேன். அப்போது, எங்களை நல்ல முறையில் பராமரிப்பதாகவும், செலவுக்கு மாதந்தோறும் பணம் தருவதாகவும் கூறினார். ஆனால் கூறியதுபோல் செய்யவில்லை. இதனால் அவதிப்பட்ட நாங்கள் பிரச்னை குறித்து ஆர்டிஓவிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பாக புகார் மனு அளித்தோம். எங்கள் வயதின் அடிப்படையில் முதியோர்
பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.3,000 எனது வங்கிக் கணக்கில் செலுத்த ஆர்டிஓ உத்தரவிட்டார். ஆனால் 3 வருடங்களாகியும் மகன் எங்களுக்கு பணம் தரவில்லை. இதனால் மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தேன். எங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு, நான் அளித்த கோரிக்கை மனு மீது கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
The post முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற மகனுக்கு தானம் வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.