×

நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில்

திருச்சி,ஜூன்.25: நாளை முதல் மதுரையில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் சிறப்பு ரயில் திருச்சி வழியாக பெங்களூர் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமைகளை தவிர்த்து வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும். வரும் 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி வரை இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரையில் இருந்து நாளை (ஜூன்26) முதல் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயிலானது திருச்சிக்கு காலை 7.7க்கு வந்து பின்னர் 7.12க்கு இங்கிருந்து புறப்பட்டு கரூர், சேலம் மார்க்கமாக பெங்களூருக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு சென்றடையும். இதேபோன்று மறுமார்க்கமாக, நள்ளிரவு 1.45 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்த வழியிலேயே திருச்சிக்கு காலை 7.35க்கு வந்து, பின்னர் 7.40க்கு இங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும் என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Trichy ,Madurai ,Bangalore ,Southern Railway ,Trichy.… ,Dinakaran ,
× RELATED ஐசிஎப் நிறுவனம் இதுவரை 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை