×

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28ம் தேதி நடக்கிறது

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற் கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Perambalur District Farmers Grievance Meeting ,Perambalur ,District Collector ,Karpakam ,Perambalur District Farmers Grievance Redressal Meeting ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தி்ல்...