×

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் மானியத்தில் விதைகள், நாற்றுகள், இடுபொருட்கள் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது : தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக் கத்திற்கு, பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2024-25 ம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 2415 ஹெக்டர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ456.799 லட்சம் பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரி வாக்க இனத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளன. மேலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்து வதற்காக நீர் சேகரிப்பு அமைப்பு,வீரியரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில், நிலப் போர்வை போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங் கப்பட உள்ளன.

தேனீப் பெட்டிகள், தேனீக் கள் மற்றும் தேன் எடுப்பத ற்கான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அங்கக வேளாண்மை முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட் கள் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் வயலில் விளையும் விளைபொருட்க ளை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்கவும் வெங் காய சாகுபடி செய்யும் விவ சாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற் காக 25 மெ.டன் (1 யூனிட்) கொண்ட குறைந்த செலவி லான வெங்காய சேமிப்பு அமைப்பு அமைக்கவும் 50 சதவீத மானியம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ் போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை கொண்டு சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாக www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயி லாகவிண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்டக் கலெக்டர் கற்பகம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் மானியத்தில் விதைகள், நாற்றுகள், இடுபொருட்கள் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District Collector ,Karpagam ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...