×

பெரம்பலூர் மக்கள்குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற மக்கள்குறைதீர் நாள் கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று 24ஆம் தேதி திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நடைபெற் றது கூட்டத்திற்கு பெரம்ப லூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமை வகித் தார். இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்த சமூக ஆர்வலரான ராகவன் தலைமையில் மேலும் சில சமூகஆர்வலர்கள் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டமா னது பெருவாரியான மானாவாரி நிலங்களைக் கொண்டுள்ள மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிலத் தடி நீர்மட்டம்,வேளாண்மை, கால்நடைகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் நீர்த் தேவை, குடிநீர் உள்ளிட்ட அனைத்திற்கும் முக்கிய ஆதாரங்களாக மாவட்டத் தின் ஆறுகள் விளங்குகி றது. பெரம்பலூர் மாவட்டத் தின் மேற்கு அரணாக விளங்கும் பச்சைமலைத் தொடரானது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொட ரைவிட பழமை வாய்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் அங்க மாக உள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆறுகளின் தாய் மடியாகவும் பச்சைமலை விளங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தின் பச்சைமலைப் பகுதியில் இருந்து மருதையாறு, கல்லாறு, சின்னாறு, கோனேரிஆறு, சுவேதா நதி, நந்தியாறு, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் உரு வாகிச் செல்லும் வழியெங் கும் வளம் சேர்க்கிறது.

மேலும் வேப்பூர் ஒன்றியத் தின் முக்கிய நீராதாரமாக சங்கு நதி என்கிற ஆனை வாரி ஓடையும் விளங்குகி றது. இந்த நீர்நிலைகளு க்கு பல்வேறு கிளை ஓடை களும் பல நூற்றுக்கணக் கான சிற்றோடைகளும் உள்ளது. செல்லும் வழி யெங்கும் வளம் சேர்க்கும் ஆறுகள், இன்று சீமைக்கரு வேல மரங்கள் உள்ளிட்ட முட்செடிகளின் பிடியில் சிக்கி தங்களின் அடையா ளத்தை இழந்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய ஆதாரங்களான இந்த ஆறுகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் உள் ளிட்ட முட்செடிகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்து கிறது. ஆகவே மாவட்டத் தின் நலன் மற்றும் சுற்றுச் சூழல், பல்லுயிர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நிதிபெற்று சிறப்புத் தூர்வாறும் திட்டத் தின் கீழ் போர்க்கால அடிப் படையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிப் பாது காக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்என அந்த கோரிக்கை மனுவில் தெரி வித்துள்ளனர்.

பெரம்பலூர் ஒன்றியத்திற்குட் உபட்ட எளம்பலூர் ஊராட்சி, எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதா வது: எளம்பலூர் எம்ஜிஆர் நகர் பொதுமக்கள் சார்பாக இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பித்து இரண்டு வருடமாக வீட்டு மனை கோரி போராடி வரு கிறோம். இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். இத னால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில்வசிக்கும் சொந்த வீடற்ற எங்களுக்கு மிக விரைவாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனு வில் தெரிவித்துள்ளனர்.

The post பெரம்பலூர் மக்கள்குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur People's Day Meeting ,Perambalur ,Makkalkuraitheer day ,Perambalur Collector ,Office ,Collector ,Karpagam ,Perambalur Makkalkuraitheer day meeting ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...