×

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்ககோரி அரசு போக்குவரத்து கழக சிஐடியூ சங்கத்தினர் 24 மணிநேர உண்ணாவிரதம்

பெரம்பலூர், ஜூன்.25: ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியு றுத்தி பெரம்பலூர் துறை மங்கலம் டெப்போ முன்பு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டெப்போமுன்பு, அரசு போக் குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நேற்று(24ம் தேதி)காலை 10 மணிக்கு தொடங்கியது.

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும், காலிப் பணியி டங்களை நிரப்பவேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சமூக நீதியை சீர்குலைக் கும் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும், ஓய்வு பெற்றோ ருக்கு 14 மாத டிஏ வழங்க வேண்டும் என்பன உள்ளிட் டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் 24 மணிநேர உண் ணாவிரத போராட்டத்திற்கு அரசு போக்குவரத்து ஊழியர்கள் மத்திய சங்க பொருளாளர் சிங்கராயர் தலைமை வகித்தார். சி.ஐ.டியு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் அகஸ்டின் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து துவக்க உரையாற்றினார்.

இதில்அரசுப் போக் குவரத்து ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சீனிவாசன், ஜெயங்கொ ண்டம் டெப்போவை சேர்ந்த நீலமேகம், வீரமணி ஆகி யோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிளைச் செயலாளர் அறிவழகன் உள்பட 25 பேர் கலந்துகொண்டனர். இன்று 25ம்தேதி காலை 10மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம்நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்ககோரி அரசு போக்குவரத்து கழக சிஐடியூ சங்கத்தினர் 24 மணிநேர உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporation ,CITU ,Perambalur ,Government Transport Corporation Employees' Union ,Mangalam Depot ,
× RELATED போக்குவரத்து ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்