×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், ஜூன் 25: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு ஜூலை மாதம் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு அக்டோபர் மாதம் 18ம் தேதி நடத்தப்படும். 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் மற்றும் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி குறித்த விவரங்கள் ஆன்லைன் முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். இத்தேர்வானது மூன்று முறைகளை கொண்டது எழுத்துத் தேர்வு, உடல் தகுதிதேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம். ஆக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிமுடிந்த பிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Agniveer ,Nagapattinam District ,Nagapattinam ,Collector ,Janidam Varghese ,Agniveer Vayu ,Agniveervayu ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும்...