×

ஹோமியோபதி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை ஆரணி அருகே முதியோர் இல்லத்தில்

ஆரணி, ஜூன் 25: ஆரணி அருகே முதியோர் இல்லத்தில் ஹோமியோபதி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இபி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(84), மோமியோபதி டாக்டர். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் இறந்துவிட்டனர். எனவே வெங்கடேசன் பெங்களூருவில் உள்ள அவரது மகள்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மனைவி, மகன்கள் இறந்துவிட்டதை நினைத்து மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், வெங்கடேசனுக்கு தனது மகள்கள் வீட்டில் வசிக்க விருப்பமில்லாததால், கடந்த 19ம் தேதி அவரது மகள்கள் சாந்தி, பத்மாவதி ஆகியோர் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் வெங்கடேசனை சேர்த்துவிட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து, வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு முதியோர் இல்லத்தில் உள்ள அவரது அறைக்கு சென்று தூங்கியுள்ளார். அதன்பின்னர் நீண்டநேரம் வெளியில் வராததால் சந்தேகமடைந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள், அவர் தங்கிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து, முதியோர் இல்ல பொறுப்பாளர் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெங்கடேசனின் தங்கை சாந்தி(55) கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதியோர் இல்லத்தில் ஹோமியோபதி டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஹோமியோபதி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை ஆரணி அருகே முதியோர் இல்லத்தில் appeared first on Dinakaran.

Tags : Arani ,Venkatesan ,EP Nagar ,Tiruvannamalai district ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...