×

அஞ்சலகங்களில் நாளை ஆதார் சேவை நேரம் அதிகரிப்பு

தென்காசி, ஜூன் 25: சங்கரன்கோவில், கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் சிறப்பு செயல்பாட்டு நேரம் நாளை (26ம் தேதி) முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஆதார் விவரங்களானது (டாக்மென்ட் அப்டேட்) 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்கபட வேண்டும். ‘முன்பு தயாரிக்கப்பட்ட உங்கள் ஆதார் இன்னும் புதுப்பிக்கப்படவில்லையா?’ என்ற கேள்வியை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவை மையத்தின் சிறப்பு செயல்பாட்டு நேரம் நாளை (26ம் தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அரிய இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

The post அஞ்சலகங்களில் நாளை ஆதார் சேவை நேரம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Denkasi ,Aadhaar Enrollment ,Service Center ,Kovilpatti ,Tenkasi ,Sankaranko ,
× RELATED அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்