×

ருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர், ஜூன் 25: திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் தலைமை வகித்தார். முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன் வரவேற்றார். ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், காயல்பட்டினம் நகர செயலாளர் அம்பேத், உடன்குடி நகர செயலாளர் தவுபிக் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மண்டல முன்னாள் செயலாளர் தமிழினியன், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, வீடு அறக்கட்டளை நிறுவனர் தமிழ்ச்செல்வன், விசிக நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மணிகண்டராசா, இந்திய கம்யூ. நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய முன்னாள் செயலாளர் கணபதி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர்கள் முன்னோடி தமிழன், ராவணன், ஆறுமுகநயினார், திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் முத்துராமன், தென்திருப்பேரை நகர அமைப்பாளர் முருகப்பெருமாள், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர்உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் நன்றி கூறினார்.

The post ருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vichika demonstration ,Ruchendur ,Tiruchendur ,Liberation Tigers of India ,Tiruchendur Bus Station ,Visika ,Nellai district ,Marxist Communist office ,Pasarai ,
× RELATED திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது