×

கோயில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை

சேலம், ஜூன் 25: கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு, இந்து சமய அறநிலையத்துறை சேலம் உதவி ஆணையர் ராஜாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பூசாரிகள் அடையாள அட்டை வழங்க வேண்டும் என ெசன்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ‘‘ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் அந்தந்த மாவட்ட உதவி ஆணையர், செயல்அலுவலர் மற்றும் ஆய்வர்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும்,’’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அடையாள அட்டை பூசாரிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே விரைவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கோயில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை appeared first on Dinakaran.

Tags : Salem ,State President ,Temple Priests' Welfare Association ,Vasu ,Assistant Commissioner ,Raja ,Hindu Religious Charities Department ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு