×

வெம்பக்கோட்டை அருகே புதர்மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

ஏழாயிரம்பண்ணை, ஜூன் 25: வெம்பக்கோட்டை அருகே இனாம் மீனாட்சிபுரத்தில் நிழற்குடையை சுற்றி வளர்ந்துள்ள முள்செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட இனாம் மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. எனவே நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, கடந்த 2014-15ம் ஆண்டு நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நிழற்குடையை முறையாக பராமரிக்காததால் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளதால் நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள், மாணவர்கள் தயங்குகின்றனர்.
மாறாக திறந்தவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே முள்புதர்களை அகற்றி நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post வெம்பக்கோட்டை அருகே புதர்மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Putharmandi ,Wembakot ,Inam Meenadchipuram ,VARUDHANAGAR DISTRICT ,WEMBACKOTA TALUKA ,
× RELATED வெம்பக்கோட்டை பகுதிக்கு வெளிநாட்டு...