×

ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும்

விருதுநகர், ஜூன் 25: நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், “மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும். புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் தரைத்தளத்தில் இருக்க வேண்டும்.

பார்வையற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் அட்டை புதுப்பிக்க மற்றும் புதிய அட்டை விண்ணப்பிக்க பிற மாவட்டங் களை போன்று முகாம்கள் நடத்தி பஸ் அட்டையை வழங்க வேண்டும். கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை குறைதீர்ப்பு கூட்டம் முறையாக நடத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாட்கள் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். புதன்கிழமை நடைபெறும் மருத்துவ முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்றே அடையாள அட்டை வழங்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

The post ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Collectorate ,Association of Persons with Disabilities ,
× RELATED 59 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்