×

மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு ஒட்டுனர்கள் வலியுறுத்தல்

 

பல்லடம், ஜூன்25: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பல்லடம் கிளை மேலாளர் ரவிச்சந்திரனிடம், பல்லடம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:பல்லடம் அரசு போக்குவரத்து கிளையில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் முறையாக திருப்பூர் பஸ் நிலையம் சென்றும், அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படுகிறது.இதனால் பயணிகள் பயன் அடைந்து வருகிறார்கள்.

ஆனால் திருப்பூர் – பல்லடம் ரோட்டில் மினி பஸ்கள் சட்ட விரோதமான வழித்தடங்களில் இயக்குவது அதிகரித்து வருகிறது. மேலும் திருப்பூர்-பல்லடம் ரோட்டில் அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்குகின்றனர். உரிம உத்தரவு இல்லாமல் வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்கப்படும் போது அரசு பஸ் ஓட்டுனர்கள் அது குறித்து கேட்டால் தகாத வார்த்தைகளால் பேசி,மிரட்டல் விடுகின்றனர்.

உரிய சீருடை அணியாமலும், மது போதையிலும் மினி பஸ்களை இயக்கி வருகின்றனர். சட்டவிரோதமாக வழித்தடத்தில் செல்லும்போது பின்னால் வரும் அரசு பஸ்களுக்கு வழி விடுவது கிடையாது. எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்து, சட்ட விரோதமாக இயக்கப்படும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு ஒட்டுனர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tamil Nadu Government Transport Corporation ,Ravichandran ,Palladam Government Transport Branch ,
× RELATED வார விடுமுறையில் சிறப்பு பேருந்துகள்...